உலக செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அதிரடி தாக்குதலில் சிரியா அரசு ஆதரவு படை வீரர்கள் 22 பேர் பலி + "||" + At least 22 people killed in Syrian government forces in the terrorist attacks

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அதிரடி தாக்குதலில் சிரியா அரசு ஆதரவு படை வீரர்கள் 22 பேர் பலி

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அதிரடி தாக்குதலில் சிரியா அரசு ஆதரவு படை வீரர்கள் 22 பேர் பலி
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அதிரடி தாக்குதலில் சிரியா அரசு ஆதரவு படை வீரர்கள் 22 பேர் பலியாகியுள்ளனர்.
பெய்ரூட், 

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொட்டம் ஒடுக்கப்பட்டது. தலைநகர் டமாஸ்கஸ் அருகே கடைசி இருப்பிடத்தை கொண்டிருந்த அவர்கள் அங்கு இருந்து கடந்த மாதம் விரட்டியடிக்கப்பட்டு விட்டனர். அதைத் தொடர்ந்து அரசு ஆதரவு படை வீரர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டு அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஸ்வேய்டா மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதல்களில் சிரியா அரசு ஆதரவு படையினர் 22 பேர் பலியாகினர்.

அவர்களில் 2 அதிகாரிகள் உள்ளிட்ட 11 சிரியா வீரர்களும் அடங்குவர்.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அரசு ஆதரவு படை வீரர்களை குறிவைத்து நடத்தி உள்ள தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் டெயிர் இஸ்ஸார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு ஆதரவு படையினர் 45 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதற்கு இடையே இத்லிப் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 44 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதல்களை ரஷிய படையினர் நடத்தியதாக கூறப்படுகிறது.