அமெரிக்க கடற்படையின் தகவல்களை திருடும் சீன ஹேக்கர்கள்


அமெரிக்க கடற்படையின் தகவல்களை திருடும் சீன  ஹேக்கர்கள்
x
தினத்தந்தி 9 Jun 2018 7:43 AM GMT (Updated: 9 Jun 2018 7:43 AM GMT)

சீனாவின் ஹேக்கர்கள் அமெரிக்க கடற்படைத் தகவல்களை திருடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்

சீன அரசாங்க ஹேக்கர்கள் ஒரு அமெரிக்க கடற்படை ஒப்பந்தக்காரர் மற்றும்  கடற்படை போர் தொடர்பான மிகுந்த  ரகசிய தகவல்கலை திருடி உள்லதாக கூறப்படுகிறது. இதில் ஒரு புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்த இருந்த  இரகசியத் திட்டம், ம்ற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை திட்டங்கள் இதில் அடங்கும் என  ஒரு ஊடக அறிக்கை கூறி உள்ளது.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில்  சில 614 ஜிகாபைட் தகவல்கள் திருடப்பட்டு உள்ளன.2020 வாக்கில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்பாட்டுக்கு ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணை ஏவுகணை ஒன்றை உருவாக்கும் இரகசியத் திட்டங்களாக இவை இருந்தன என வாஷிங்டன் போஸ்ட் தகவல் வெளியிட்டு உள்ளது.

பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி கூறியதை  மேற்கோள் காட்டி, தினசரி திருடப்பட்ட தகவல்கள்  மேலும் கடல் டிராகன் என அறியப்படும் ஒரு இரகசிய திட்டம் தொடர்பான தகவல் சேர்க்கப்பட்டுள்ளது என கூறி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அத்துடன் சிக்னல்களை மற்றும் சென்சார் தரவு,   கிரிப்டோகிராஃபி அமைப்புகள் தொடர்பான கடற்படை ரேடியோ அறை தகவல், மற்றும் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மேம்பாட்டு பிரிவின் மின்னணு போர் நூலக தகவல் அனித்தும் திருடப்பட்டு உள்ளதாக கூறபட்டு உள்ளது. 

Next Story