30 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!


30 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!
x
தினத்தந்தி 9 Jun 2018 10:58 AM GMT (Updated: 9 Jun 2018 10:58 AM GMT)

சீனாவில் விஞ்ஞானிகள் நடத்திய ஆழ்கடல் ஆய்வில் 30 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் தூண்டில் இரையுடன், காமிராவை பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது தூண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக வந்த உயிரினங்கள் காமிராவில் பதிவாகின. அவற்றில் 30 உயிரினங்கள் புதியவை என்பது பின்னர் நடந்த ஆய்வில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் சர்வதேச கடல் ஆணையக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சீன விஞ்ஞானிகள் ஆழ்கடல் ஆய்வில் புதிதாகக் கண்டறியப்பட்ட 30 புதிய உயிரினங்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் பலவகை மீன்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் செந்நிற இறால்கள், பாம்பு வடிவ ஈல் மீன்கள், பெரிய கண்களுடன் விமானம் போன்று காட்சி தரும் அரிய வகை மீன் உள்ளிட்டவை முக்கியமானவை.

இந்தப் பூமியையும், அதில் வாழும் உயிரினங்களையும் மனிதர்களாகிய நாம் இன்னும் முழுமையாக அறிந்துவிடவில்லை என்பதை சீன விஞ்ஞானிகளின் இக்கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. 

Next Story