உலக செய்திகள்

பேரக்குழந்தைகளை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த பாட்டி + "||" + Grandchildren  Locked in the puppy Grandmother

பேரக்குழந்தைகளை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த பாட்டி

பேரக்குழந்தைகளை  நாய்க்கூண்டில் அடைத்து வைத்த பாட்டி
அமெரிக்காவின் டென்னிஸி பகுதியில் தனது பேரக் குழந்தைகளை நாய் கூண்டில் அடைத்து வைத்த பாட்டி கைது செய்யப்பட்டார்.

லீமோனி செக்  (62) என்ற அமெரிக்கப் பெண் தனது பேரக் குழந்தைகளை தனது வாகனத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த நாய் கூண்டுகளிலிருந்து வெளியே திறந்து விடும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியது.

லீமோனி மீது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏழு மற்றும் எட்டு வயதுள்ள அந்த இரண்டு குழந்தைகளையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தங்கள் பாட்டி வேனில் போதுமான இடம் இல்லை என்று கூறி தங்களை நாய் கூண்டில் அடைத்து கொண்டு வந்ததாக குழந்தைகள் கூறினர்.

அவர்களை அடைத்து வைத்திருந்த கூண்டு மிகவும் சிறியதாக இருந்ததாகவும்,  லீமோனி  ஏசி கூட போடாமல் வேனின் ஜன்னல்களை மூடி வைத்திருந்ததாகவும் குழந்தைகள் கூறினர்.போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.