உலக செய்திகள்

5 வது மாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய சீன ஸ்பைடர்மேன் + "||" + Chinese spider man! Veteran saves a child dangling from window in Hunan.

5 வது மாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய சீன ஸ்பைடர்மேன்

5 வது மாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய சீன ஸ்பைடர்மேன்
சீனாவில் ஐந்தாவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை முதியவர் ஒருவர் மீட்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் ஹூனன் நகரில்  2வயதான  குழந்தை மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்து விட்டது.அவனது தலை கம்பிகளுக்கிடையில் சிக்கிக் கொள்ள அபாயகரமான நிலையில் குழந்தை அழுதவேரே தொங்கிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட ஷாங் சின்  என்னும் முதியவர் படிக்கட்டுகள் வழியே சென்றால் கால தாமதமாகி விடலாம் என்று எண்ணி கட்டிடத்தின் வெளிப்புற ஜன்னல்கள் வழியே படபடவென ஏறி சென்று குழந்தையை மீட்டார்.

 முன்னாள் ராணுவ வீரரான அவர் மிகவும் தாழ்மையுடன், நான் ஒரு ராணுவ வீரன், இந்த நிலைமையில் எந்த ராணுவ வீரரானாலும் நான் செய்ததைத்தான் செய்திருப்பார் என்கிறார்.

ஷாங்கையும் சீன இணையதளம் ஒரு ஹீரோ என பாராட்டி, நீங்கள் எங்கள் சீன ஸ்பைடர்மேன் உங்களுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என புகழாரம் சூட்டியுள்ளது.

இதேபோல் பிரான்ஸில் கசாமா என்ற வாலிபர் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை மீட்டதற்காக பிரான்ஸ் குடியுரிமை பெற்றது நினைவிருக்கலாம்.