உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பொருளாதார ஆலோசகர் லேரி குட்லோ மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
* ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் புளோவ்டிவ் நகரில் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதன் 2 விமானிகளும் உயிரிழந்தனர். ஒரு வீரர் படுகாயம் அடைந்தார்.

* பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் ரிக்கார்டோ மார்டினல்லி சட்ட விரோதமாக உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தனது அரசியல் எதிரிகளை உளவு பார்ப்பதற்காக அரசு நிதியை பயன்படுத்தினார் என்ற புகாரும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட அவர், இப்போது பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளார்.


* ஈராக் நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு பெட்டிகள் அடங்கிய கட்டிடத்துக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 4 பேரை கைது செய்யுமாறு அங்கு உள்ள கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

* எல்சல்வேடார் நாட்டில் முன்னாள் அதிபர் மவுரிசியோ பியுனஸ்சுடன் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள தற்போதைய மந்திரி ஒருவர் உள்பட 17 பேரை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

* மத்திய தரைக்கடலில் 629 அகதிகளுடன் ஒரு கப்பல் சிக்கி தவிக்கிறது. அவர்களை மீட்டு ஏற்பதற்கு இத்தாலியும், மால்டாவும் மறுத்து விட்ட நிலையில், ஸ்பெயின் ஏற்க முன் வந்து உள்ளது.