தென்கொரியாவுடன் மீண்டும் போர் பயிற்சி தொடரக்கூடும்: வடகொரியாவுக்கு டிரம்ப் மிரட்டல்

வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், தென்கொரியா நாட்டுடன் இணைந்து அமெரிக்கா மீண்டும் போர் பயிற்சியில் ஈடுபடும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #DonaldTrump
தென்கொரியாவுடன் மீண்டும் போர் பயிற்சி தொடரக்கூடும்: வடகொரியாவுக்கு டிரம்ப் மிரட்டல்
Published on

வாஷிங்டன்,

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு, சிங்கப்பூரில் ஜூன் 12ந் தேதி நடந்தது.

இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. முதலில் நேருக்கு நேரும், பின்னர் தூதுக்குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.

இந்த சந்திப்பு திருப்திகரமாக இருந்தது என இரு தலைவர்களும் தெரிவித்து இருந்தனர். மேலும், தென்கொரியாவுடனான போர் பயிற்சியை அமெரிக்கா நிறுத்தி வைப்பது தொடர்பான திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்.டிரம்ப்- கிம் சந்திப்பையடுத்து, கொரிய தீபகற்பத்தில் முற்றிலும் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், தென்கொரியா நாட்டுடன் இணைந்து அமெரிக்கா மீண்டும் போர் பயிற்சியில் ஈடுபடும் என்று வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தென்கொரியாவுடனான போர் பயிற்சியை நிறுத்துவது தொடர்பான யோசனையை நான்தான், வடகொரிய அதிபர் கிம் ஜாங்- அன்னுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது முன்வைத்தேன்.போர் பயிற்சி நடத்துவதற்கு அதிக செலவு ஆகிறது. அதேபோல், நல்லெண்ணத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை மீது அது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆதலால், போர் பயிற்சியை நிறுத்துவது தொடர்பான யோசனையை நான் வெளியிட்டேன்.

அதேநேரத்தில், வடகொரியாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தோல்வியடையும்பட்சத்தில், போர் பயிற்சியை உடனடியாக அமெரிக்கா தொடங்கும் என்று அந்தப் பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com