ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு: அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது. #USA #UN
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு: அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு
Published on

நியூயார்க்,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக, அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே அறிவித்தார்.

உலக நாடுகளில் அமைதியை கொண்டு வருவதில் அமெரிக்காவின் மனித உரிமை கவுன்சில் மிக முக்கியமான பங்கு வகித்து வருகிறது. இதில் பல முக்கிய நாடுகள் அங்கம் வகித்து வருகிறது.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், மனித உரிமைகள் துஷ்பிரயோகம் மற்றும் தன்னாட்சி அமைப்புபோல செயல்படும் ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பு மனித உரிமைகள் தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக உள்ளது. நாடுகளுக்கு இடையில் பாகுபாடு காட்டுகிறது. இதனை கருத்தில் கொண்டு

ஐ. நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது என்று கூறினார்.

சமீபத்தில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அதன்பின் ஈரான் உடன்படிக்கையில் இருந்தும் விலகியது. இந்த நிலையில் தற்போது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com