உலகைச் சுற்றி

* ஜெர்மனியில் முதன்முதலாக உயிரி வெடிகுண்டு தாக்குதல் நடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக துனிசியாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
*காசாமுனை பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக, அங்கு உள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் 25 இலக்குகள் மீது குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
*வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கை விடும் வரை அந்த நாட்டின் மீதான பொருளாதார தடை தொடரும் என தென்கொரிய வெளியுறவு மந்திரி காங் கியுங் வா கூறினார்.
*ஆஸ்திரேலியாவில் பணி இடங்களில் நிலவுகிற செக்ஸ் தொல்லை தொடர்பாக ஆண்களும், பெண்களும் புகார்கள் எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக தேசிய அளவில் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
*சீனாவை மறுகட்டமைப்பு செய்தது அமெரிக்காதான் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story






