லண்டன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதி கிளப்பிய நபர் கைது

லண்டன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதி கிளப்பிய நபரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
லண்டன்,
பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்குகள் உள்ள நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்தும் உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிக அளவில் உள்ளது. இந்த சூழலில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஷேரிங் கிராஸ் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒருவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிகுண்டு பீதி ஏற்பட்டதும் ரயில் நிலையத்தில் கட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர், பயணிகளை அனுமதிக்காமல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில், வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக கூறிய நபரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, ரயில் நிலையத்தை மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிப்பது தொடர்பான பாதுகாப்பு பணிகள் நடப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு இங்கிலாந்தில் இருந்து தலைநகர் பகுதியை இணைக்கும் முக்கிய முனையமாக உள்ள இந்த ரயில் நிலையத்தில், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story






