அந்தரத்தில் பறந்து தூக்கி வீசப்பட்ட பயணிகள் 3 பேர் பலி


அந்தரத்தில் பறந்து தூக்கி வீசப்பட்ட பயணிகள் 3 பேர் பலி
x
தினத்தந்தி 26 Jun 2018 10:29 AM IST (Updated: 26 Jun 2018 10:29 AM IST)
t-max-icont-min-icon

சீனாவில் 33 ஆசிரியர்களோடு பயணம் செய்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சீனாவில்  ஷோகூவான் எண் 8 மத்திய  பள்ளியின் 33 ஆசிரியர்கள் பள்ளி விழாவில் கலந்து கொள்ள சென்றனர். அவர்கள் சென்ற   பேருந்து   எக்ஸ்பிரஸ் வழி அருகே சென்று கொண்டு இருந்த போது  திடீரென நிலைதடுமாறி அந்தரத்தில் பறந்து  குப்புற கவிழ்வதும் அதில் இருந்த பயணிகள் தூக்கியெறியப்படுவதும் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளன.இந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் , 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து அதன் வேகத்தில் வந்து கொண்டிருக்கும்போது கீழே கொட்டியிருந்த எண்ணெய் போன்ற பொருளால் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

மலைப்பாதை வழியாக செல்ல சுரங்கப்பாதை அருகே செல்லும்போது திடீரென இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக இந்த பேருந்தின் பின்னால் வந்து கொண்டிருந்த சிவப்பு நிற ட்ரக் பிரேக் போட்டு நின்றதால் மேலும் உயிர்சேதம் ஆகாமல் தடுக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்தவர்களில் சீட் பெல்ட் அணியாதவர்கள் தூக்கியெறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஷோகூவான் எண் 8 மத்திய பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள்தான் அந்த பேருந்தில் இருந்துள்ளனர். பள்ளி விழா ஒன்றில் கலந்து கொள்ள அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
1 More update

Next Story