சவுதி அரேபியாவில் அநாகரீக உடை அணிந்ததற்காக பெண் தொகுப்பாளர் மீது விசாரணை


சவுதி அரேபியாவில் அநாகரீக உடை அணிந்ததற்காக பெண் தொகுப்பாளர் மீது விசாரணை
x
தினத்தந்தி 28 Jun 2018 5:50 PM IST (Updated: 28 Jun 2018 5:50 PM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியாவில் அநாகரீக உடை அணிந்ததற்காக பெண் தொகுப்பாளர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ரியாத்

சவுதி அரேபியாவில் சில நாட்களுக்கு முன் பெண்களுக்கு  வாகனம் ஓட்ட உரிமை வழங்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக பலரும் வாகனங்களின் பயணிக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இது தொடர்பான செய்தியை அல் ஆன் டிவி  சார்பில் பெண் தொகுப்பாளர் ஷிர்ரீன் அல்-ரிபாய் வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது வேகமாக அடித்த காற்றால் அவர் அணிந்திருக்கும் உடை வெளியில் தெரிந்தது, முடியும் வெளியில் தெரியும் வண்ணம் ஹிஜாப் அணிந்திருந்தார். இவரது உடை மிகவும் அநாகரீகமாக இருந்ததாக கூறி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தான் எந்த தவறும் செய்யவில்லை என ஷிர்ரீன் விளக்கம் அளித்துள்ள நிலையில், அவர் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், இவரது பாஸ்போர்ட்  கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
1 More update

Next Story