அமெரிக்கா அன்னபோலிஸ் துப்பாக்கி சூடு ஜனாதிபதி டிரம்ப் கவலை


அமெரிக்கா அன்னபோலிஸ் துப்பாக்கி சூடு ஜனாதிபதி டிரம்ப் கவலை
x
தினத்தந்தி 29 Jun 2018 5:16 PM IST (Updated: 29 Jun 2018 5:16 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்கா அன்னபோலிஸ் பத்திரிகை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து ஜனாதிபதி டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் அன்னபோலிஸ் என்ற நகரில் 4 அடுக்கு அலுவலக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது.  இங்கு தி கேபிட்டல் கெஸட் என்ற நாளிதழ் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், அலுவலகத்திற்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபரொருவர் திடீரென அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.  இதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.  இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேற்றி உள்ளனர்.  தொடர்ந்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் 
தாக்குதலில் ஈடுபட்ட அவரது பெயர் ஜரோட் ரமோஸ் (வயது 38) என்று தெரியவந்தது. 

பத்திரிகை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து ஜனாதிபதி டிரம்பிடம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். இதைக்கேட்ட அவர் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டதாக வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு துணை செயலாளர் லிண்ட்சே வால்டர்ஸ் கூறினார்.
1 More update

Next Story