சுரங்கபாதையில் நச்சு அமிலத்தை செலுத்திய ஜப்பான் சாமியார் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை

சுரங்கபாதையில் நச்சு அமிலத்தை செலுத்திய ஜப்பான் சாமியார் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
சுரங்கபாதையில் நச்சு அமிலத்தை செலுத்திய ஜப்பான் சாமியார் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை
Published on

ஜப்பானில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் 1995ஆம் ஆண்டு நச்சு வாயு தாக்குதல் நடத்த பட்டது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர். 'சரின்' என்ற நச்சு அமிலத்தை சுரங்கப்பாதைக்குள் செலுத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலை ஓம் ஷினிக்யோ என்ற வழிபாட்டு குழு நடத்தியதாக கண்டறியப்பட்டது. இதன் தலைவர் ஷோகோ அசஹரா கைது செய்யப்பட்டார். ஓம் ஷினிக்யோ, இந்து மற்றும் பவுத்த மத நம்பிக்கைகளை சேர்க்கும் ஆன்மீக குழுவாக 1980களில் தொடங்கப்பட்டது . இதற்கு அர்த்தம் 'உச்சக்கட்ட உண்மை' என்பதாகும்.

தற்போது ஓம் ஷினிக்யோ வழிபாட்டு குழுவின் தலைவர் ஷோகோ அசஹராவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இதில் உறுப்பினராக உள்ள மேலும் 6 பேரும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com