உலக செய்திகள்

தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டார்கள் - அதிகாரிகள் தகவல் + "||" + 4 boys brought out of Thai cave as rescue begins, says official

தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டார்கள் - அதிகாரிகள் தகவல்

தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டார்கள் - அதிகாரிகள் தகவல்
தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThailandCaveRescue

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையில் சிக்கிய 12 சிறார்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் பணியில் மீட்பு குழு தீவிரமாக இறங்கியுள்ளது. முக்குளிப்பவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். 

அதிரடியான மீட்பு பணி தொடங்கிய நிலையில் 4 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மீட்கப்பட்ட சிறார்கள் இப்போது மீட்பு குழு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. சியாங்ராய் மாகாணத்தின் மருத்துவ அதிகாரி பூன்தோங் பேசுகையில், “வெளியே கொண்டு வரப்பட்டுள்ள சிறுவர்கள் இப்போது மீட்பு குழு மையத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என கூறியுள்ளார். 

அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது, அவர்கள் சியாங்ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். மற்ற சிறுவர்களை மீட்கும் பணி மிக தீவிரமாக நடைபெறுகிறது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.