உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + An American soldier was killed in an attack in Afghanistan

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதல் ஒன்றில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் பலி ஆனார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
* ஐக்கிய அரபு அமீரகத்தில் மக்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கும் கால கட்டம், 12 மாதங்களில் இருந்து 16 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

* ஜப்பான் நாட்டில் நேற்று தொடர்ந்து 3-வது நாளாக மழை வெளுத்துக்கட்டியது. அங்கு மழை, வெள்ளம், நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது. 92 பேரை காணவில்லை.

* லண்டன் சொகுசு பங்களா தொடர்பான அவென்பீல்டு வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் இன்று மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் நாடு திரும்பப்போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

* ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதல் ஒன்றில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் பலி ஆனார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தலீபான்கள் கூறுகையில், அமெரிக்க ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்தனர்.

* தைவான் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள் கடந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விஷயம் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...