ஈரானில் நடனம் ஆடிய பெண் கைது ; இதை கண்டு உலகம் சிரிக்கும் விமர்சனம்


ஈரானில் நடனம் ஆடிய பெண் கைது ; இதை  கண்டு உலகம் சிரிக்கும்  விமர்சனம்
x
தினத்தந்தி 9 July 2018 2:45 PM IST (Updated: 9 July 2018 2:45 PM IST)
t-max-icont-min-icon

ஈரானில் நடனம் ஆடிய பெண் கைது செய்யப்பட்டதைக் கண்டு உலகம் சிரிக்கும் என விமர்சனம் எழுந்து உள்ளது.


ஈரானில் தான் நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மதே ஹோஜப்ரி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடரும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீபத்தில் நடனமாடும் வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இவருக்கு ஆதரவாக #Dancing_isn't_a_crime என்ற ஹேஷ்டேக்குடன் பெண்கள் பலரும் தங்களது வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து எழுத்தாளர் ஹோசைன் ரொனாகி, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் சுற்றத்திரியும் போது, பெண்கள் நடனமாடுவதற்காக கைது செய்யப்படுவதைக் கண்டு உலகம் சிரிக்கும் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
1 More update

Next Story