உலக செய்திகள்

தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்பு, மழை பெய்ய வாய்ப்பு வானிலை எச்சரிக்கை + "||" + 4 more boys rescued from flooded Thailand cave, rescue operations to resume tomorrow

தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்பு, மழை பெய்ய வாய்ப்பு வானிலை எச்சரிக்கை

தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்பு, மழை பெய்ய வாய்ப்பு வானிலை எச்சரிக்கை
தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர், இதுவரையில் 8 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டுள்ளனர். #ThailandCaveRescue
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையில் இருந்து நேற்று 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இன்று காலையும் நீர்மூழ்கி வீரர்கள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்கள். அதன் பயணாக 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இன்னும் 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளார் குகைக்குள் உள்ளனர். அவர்களை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று மீட்கப்பட்ட சிறுவர்கள் நல்ல உடல் நிலையுடன் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

தொற்று அபாயம் தவிர்ப்பதற்காக அவர்கள் மருத்துவமனையில் தனித்து வைக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

 இதற்கு அடுத்தக்கட்ட மீட்பு பணி அங்கிருக்கும் சூழ்நிலையை பொறுத்தது என்று மீட்பு குழுவினர் குறிப்பிடுகிறார்கள். இதற்கிடையே குகை அமைந்துள்ள பகுதியில் வானிலை எச்சரிக்கையும் எழுந்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீதம் இருப்பவர்கள் நாளை மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.