உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு: 10 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் + "||" + 10 dead, hundreds of houses destroyed in Afghan landslide: officials

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு: 10 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு:  10 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.
காபூல்

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாகாணம் பன்ஷிர். பனிக்கட்டிகளால் மலைப்பகுதிகள் அமைந்துள்ள இந்த பகுதியில், மிகப்பெரிய ஏரியும் உள்ளது. இந்த நிலையில், பனிக்கட்டிகள் உருகியதால், திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி, அப்பகுதியில் வசித்து வந்த கிராமப்புற மக்கள் 10 பேர் பலியாகினர். 

மேலும், பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் மீட்பு  பணிகளில் ஈடுபட மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகளும் நிலச்சரிவில் சிக்கி சேதம் அடைந்துள்ளன. 

நேட்டோ நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தற்போது பிரஸ்சல்ஸில் உள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்  கானி, இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு வேதனை தெரிவித்துள்ளார். தேவையான உதவிகளை உடனடியாக செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.