உலக செய்திகள்

20 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்த நர்ஸ் கைது + "||" + Japanese nurse suspected of poisoning elderly patients to death

20 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்த நர்ஸ் கைது

20 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்த நர்ஸ் கைது
20 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்த நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

டோக்கியோ

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் அய்யூமி குபோகி என்பவர் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.இவர் 2016 ஆம் ஆண்டு 88 வயது முதியவர் ஒருவருக்கு குளுக்கோஸில் விஷம் மருந்து கலந்துகொடுத்து கொலை செய்துள்ளார் என்பது தற்போது, தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முதியவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 20 நோயாளிகளை இதேபோல் மருந்தில் வி‌ஷம் கலந்து கொன்றதாக அவர் கூறியுள்ளார். அதிகம் தொல்லை தரும் நோயாளிகளை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்த அய்யூமி குபோகியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.