போலி கணக்குகள் நீக்கம் டுவிட்டரில் ஒரு லட்சம் பேரை இழந்த டொனால்டு டிரம்ப்


போலி கணக்குகள் நீக்கம் டுவிட்டரில் ஒரு லட்சம் பேரை இழந்த டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 13 July 2018 9:51 AM GMT (Updated: 13 July 2018 9:51 AM GMT)

டுவிட்டரில் போலி கணக்குகளை நீக்கியதால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. #DonaldTrump

டொனால்டு ட்ரம்பை டுவிட்டரில் பின்தொடர்வோரில் ஒரு லட்சம் பேரின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் பிரபலங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதலிடம் பிடித்து இருந்தார். அவரை  5.34 கோடி பேர் பின்தொடர்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டுவிட்டரில் போலி கணக்குகள், சந்தேகத்துக்குரிய கணக்குகள் நீக்கப்பட்டு வருகிறது. இதனால் டொனால்டு ட்ரம்பை பின்தொடர்வோரில் சுமார் ஒரு லட்சம் பேர் குறைந்துள்ளனர். இதேபோல அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை பின்தொடர்வோரில் சுமார் 4 லட்சம் பேரின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. 

மக்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் போலி கணக்குகள் நீக்கப்படுவதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே, ஜூன் மாதங்களில் மட்டும்  7 கோடிக்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்களை பின்தொடர்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Next Story