உலக செய்திகள்

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு + "||" + Indian Foreign Secretary meets with Prime Minister Ranil Wickramasinghe

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு
இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, இலங்கைக்கு சென்றுள்ளார். அவர் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நேற்று சந்தித்தார்.

கொழும்பு,

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது பற்றிய பிரச்சினை குறித்து ரனிலுடன் ஆலோசனை நடத்தினார். இலங்கையின் வடக்கு மாகாணத்தில், போரால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இந்திய நிதிஉதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டு வசதி திட்டங்கள் பற்றியும் விவாதித்தனர். இந்த திட்டங்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று ரனில் உறுதி அளித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட உள்ள பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, இலங்கை அரசு வெளியிட்ட அரசாணையில், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...