19-வது மாடியில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்


19-வது மாடியில் தொங்கியபடி உயிருக்கு போராடிய    5 வயது சிறுவன்
x
தினத்தந்தி 17 July 2018 4:20 PM IST (Updated: 17 July 2018 4:20 PM IST)
t-max-icont-min-icon

5 வயது சிறுவன் 19-வது மாடியில் தொங்கியபடி உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் 19வது மாடியில் 5 வயது சிறுவன் சுமார் 20 நிமிடங்கள் பயத்தில் அலறியபடி தொங்கியபடியே உதவி கோரியுள்ளான். இந்த நிலையில் அந்த பகுதிவழியாக சென்ற வழிபோக்கர் ஒருவருக்கு  சிறுவனின் நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அதிகாரிகளுக்கு தகவலளிக்க ஷென்ஷென் மாகாண மீட்பு குழுவினர் விரைந்து வந்து சிறுவனை மீட்டுள்ளனர்.

ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தமது பாட்டியுடன் அந்த சிறுவன் குடியிருந்து வந்துள்ளான். சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை விட்டுவிட்டு, அந்த பாட்டி நடனப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.

இதனிடையே கண்விழித்த சிறுவன் தனது பாட்டியை தேடியுள்ளான், அப்படியே பால்கனி வந்துள்ள சிறுவன் தவறி விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் வியப்பளிக்கும் வகையில் அச்சிறுவன் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பியை கெட்டியாக பிடித்துள்ளான். இதனால் அந்த 20 மாடி கட்டிடத்தின் 19-வது மாடியில் இருந்து கீழே விழாமல் உயிர் தப்பியுள்ளான். சிறுவன் அந்தரத்தில் தொங்கியபடி உதவிக்கு அலறும் அந்த வீடியோ  இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
1 More update

Next Story