சீக்கியர்கள், இந்துக்கள் எங்கள் நாட்டவர்கள், இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கிடையாது - ஆப்கான். தூதர்

சீக்கியர்கள், இந்துக்கள் எங்கள் நாட்டவர்கள் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கிடையாது என ஆப்கானிஸ்தான் தூதர் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நங்கர்கார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. அங்கு சீக்கியர் மற்றும் இந்துக்களும் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து அங்கு அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது.
சமீபத்தில் அங்கு நடந்த தாக்குதலில் 19 பேர் உடல் சிதறி பலியானார்கள். இதனையடுத்து ஜலாலாபாத் தாக்குதலை அடுத்து சில சீக்கியர்கள் இந்திய தூதரகத்திடம் பாதுகாப்பை கோரினர். சீக்கியர்கள் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் அல்லது இஸ்லாமிற்கு மதம் மாற வேண்டும் என வருத்தம் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் சீக்கியர்கள், இந்துக்கள் எங்கள் நாட்டவர்கள் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கிடையாது என ஆப்கானிஸ்தான் தூதர் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க நாட்டிற்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஹப்துல்லா மொகித், ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்றே பலர் பார்க்கிறார்கள். இதில் உண்மை என்னவென்றால் அவர்கள் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றார். ஜலாலாபாத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story






