கனடாவில் 4 மர்ம நபர்களால் இந்தியர் சுட்டுக்கொலை


கனடாவில் 4 மர்ம நபர்களால் இந்தியர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 19 July 2018 5:27 PM IST (Updated: 19 July 2018 5:27 PM IST)
t-max-icont-min-icon

கனடாவில் இந்தியர் ஒருவரை மர்மநபர்கள் 4 பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவில்  டான்வுட்ஸ் பகுதியில்  பல்விந்தர் சிங் (வயது 27) என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கடந்த 2009-ல் இந்தியாவில் இருந்து சென்று கனடாவில் குடியேறி டிரக் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.  

இந்தநிலையில் டான்வுட்ஸ் சாலையில் அவரது வீட்டு வாசலில் மர்ம நபர்கள் 4 பேர் பல்விந்தர் சிங்கை சரமாறியாக சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்று விட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  2 பேர் சரணடைந்துள்ளதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர். 
1 More update

Next Story