உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 21 July 2018 10:30 PM GMT (Updated: 21 July 2018 8:38 PM GMT)

பாகிஸ்தான் தேர்தலில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரப்வா நகர மக்களில் சுமார் 90 சதவீதம் பேர் ஓட்டு போட மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ஈரான் நாட்டில் ஈராக் எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

* அமெரிக்க நாட்டில் மிசவுரி மாகாணம் பிரான்சன் நகரில் உள்ள ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலியானதாகவும், 5 பேர் மாயம் ஆனதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 17 ஆக உயர்ந்தது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

* அணு ஆயுத ஒழிப்பை வடகொரியா முழுமையாக செய்து முடிக்கிற வரையில், அந்த நாட்டின்மீதான பொருளாதார தடைகள் நீடிக்க  வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. 

* பாகிஸ்தான் தேர்தலில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரப்வா நகரம் அமைதித்தீவாக காட்சி அளிக்கிறது. அங்கு தேர்தலையொட்டி பதாகைகளோ, சுவரொட்டிகளோ கிடையாது. அந்த நகர மக்களில் சுமார் 90 சதவீதம் பேர் ஓட்டு போட மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

*  எத்தியோப்பியா நாட்டுக்கான தனது தூதராக செமிரே ரூசம் என்பவரை எரித்ரியா நாடு நியமித்து உள்ளது. இந்த நியமனம் 20 ஆண்டுகளில் முதல் முறையாக நடந்து உள்ளது.

Next Story