நீச்சல் உடை ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் குழந்தைக்கு பாலூட்டிய படியே வந்த தாய்


நீச்சல் உடை ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் குழந்தைக்கு பாலூட்டிய படியே வந்த தாய்
x
தினத்தந்தி 23 July 2018 5:21 AM GMT (Updated: 23 July 2018 5:21 AM GMT)

நீச்சல் உடை ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் நடந்து வரும் போது பசியில் அழுத குழந்தைக்கு பாலூட்டிய படியே தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த மாரா. பாலூட்டிய படியே ரேம்ப் வாக்கை முடித்தார். இதனால் அனைத்து ஊடகங்களும் அவரை பெரும் அளவில் பாராட்டி தள்ளிவிட்டது.



நீச்சல் உடை ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் நடந்து வரும் போது பசியில் அழுத குழந்தைக்கு பாலூட்டிய படியே தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த மாரா. பாலூட்டிய படியே ரேம்ப் வாக்கை முடித்தார். இதனால் அனைத்து ஊடகங்களும் அவரை பெரும் அளவில் பாராட்டி தள்ளிவிட்டது. என்னை குறித்து பிறர் அறிந்துக்கொல்வாரா என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆனால், இப்போது என்னாலேயே நம்ப முடியவில்லை. பல ஊடகங்களில் நான் தலைப்பு செய்தியாகி இருக்கிறேன். அதுவும் எனது மகளுடன். அவளுக்கு நான் நாள்தோறும் செய்துவரும் கடமைக்காக, என்று பெருமிதமாக கூறியுள்ளார் மாரா.

இன்னும் என்னால் இது நிஜமா என்று நம்ப முடியவில்லை. எந்த இடமாக இருந்தாலும் தைரியமாக தாய் பாலூட்டலாம். இந்த செய்தியை அனைவருடன் பகிர்ந்துக் கொள்ள நான் மிகவும் நன்றியுடையவளாக கருதுகிறேன். இது மற்ற பெண்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும். நேர்மையாக சொல்ல வேண்டும் எனில், இது தலைப்பு செய்தியாக வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஏன் என்றால், இது தலைப்பு செய்தி அளவுக்கு பெரிய விஷயம் அல்ல. தாய் பாலூட்டுவது என்பது எனது அன்றாட தினசரி வேலை தான். என்றும் தான் அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார் மாரா மார்டின்.

Next Story