உலகைச் சுற்றி....

* கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்து உள்ளது.
* அமெரிக்காவில் 40 வயதுக்குள் பிரபல தொழில் அதிபர்களாகி விட்டவர்களின் பட்டியலை ‘பார்ச்சூன்’ பத்திரிகை தயாரித்து உள்ளது. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் இடம் பெற்று உள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள்.
* இங்கிலாந்து நாட்டில் வொர்செஸ்டர் நகரில் 3 வயது சிறுவன் ஒருவன் மீது திராவகம் வீசி தாக்குதல் நடத்தியதாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
*அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரிகள் ஹிலாரி கிளிண்டன், காலின் பவல், மேட்லின் ஆல்பிரைட் ஆகிய 3 பேரும் ‘மேடம் செக்ரட்டரி‘ என்ற சி.பி.எஸ். டெலிவிஷன் சேனல் நிகழ்ச்சியில் அக்டோபர் மாதம் ஒன்றாக தோன்ற உள்ளனர்.
* ஆஸ்திரேலியாவில் பெர்த் நகருக்கு வடக்கே 250 மைல் தொலைவில் அமைந்து உள்ள கிரீனாப் பிராந்திய சிறையில் ஏற்பட்ட கலவரத்தின்போது 10 கைதிகள் தப்பி விட்டனர். அவர்களில் 9 கைதிகள் பிடிபட்டனர். பிராட்லி சில்வெஸ்டர் என்ற 35 வயது கைதி மட்டும் இன்னும் சிக்கவில்லை. அவரை போலீசார் தேடுகின்றனர்.

Related Tags :
Next Story