உலகைச் சுற்றி...

* சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ரஷிய படைகளின் பங்களிப்பு முக்கியம் என்றும், ரஷிய படைகள் நீண்ட காலத்துக்கு சிரியாவில் இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் அதிபர் பாஷர் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.
* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாஸ்டா நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீக்கு ஒருவர் பலியாகி உள்ளார். நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
* அமெரிக்காவின் புகழ்பெற்ற வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருக்கும் இருவர் தங்களது நிகழ்ச்சியில், அமெரிக்காவில் முதல் சீக்கிய–அமெரிக்க நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் குர்பிர் கெர்வாலை ‘தலைப்பாகை மனிதர்’ என்று விமர்சித்தனர். இதற்காக அவர்கள் இருவரும் 10 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து பகிரங்க மன்னிப்பு கோரினர்.
* வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 31–ந் தேதி நடக்க இருக்கிறது. இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள பான்மூன்ஜோம் நகரில் இருநாட்டு ராணுவ தளபதிகளும் சந்தித்து பேச உள்ளனர்.
* செங்கடலில் பயணித்த சவுதி அரேபியாவுக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்தால் மிகமுக்கியமான சர்வதேச கப்பல் போக்குவரத்துக்குரிய செங்கடலில் இயற்கை பேரழிவு ஏற்பட்டுவிடும் எனவும் ஐக்கிய அரபு அமீரகம் கவலை தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story