இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை தொடர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரத்தை தொட்டு இந்திய மாணவி சாதனை

ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோ எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு இந்திய மாணவி சிவாங்கி பதக் சாதனை படைத்துள்ளார்.
புதுடெல்லி,
அரியானா மாநிலம் ஹிசார் நகரை சேர்ந்தவர் மாணவி சிவாங்கி பதக் (வயது 17) இவருக்கு சிறு வயதில் இருந்தே மலையேறு பயிற்சியில் ஆர்வம் கொண்டிருந்தார். இதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். உலகின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்டில் ஏற திட்டமிட்டார். அதன்படி முறையான பயிற்சிகளை மேற்கொண்ட சிவாங்கி பதக் 3 நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தார். இதன் மூலம் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய இளம்பெண் என்ற சாதனை படைத்துள்ளார்.
இதனையடுத்து, ஆப்ரிக்காவில் உள்ள உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறியுள்ளார். ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோ, 5,895 மீட்டர் உயரம் கொண்டது. ஜூலை 21-ம் தேதி இந்த சிகரத்தை ஏறத்தொடங்கி ஜூலை 24-ம் தேதி மலை சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார்.
இது குறித்து மாணவி சிவாங்கி பதக் கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்ற தாகம் எனக்கு இருந்தது. எனது மலையேற்ற பயிற்சிக்கு பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர்.
மலையேற்றம் என்பது மிகவும் ஆபத்தானது என்பதால் எனது பெற்றோர் பயந்தனர். முறையான பயிற்சியின் மூலம் மலையேற்றம் மேற்கொண்டால் அவர்களுக்கு தைரியம் கூறி எனது பயிற்சியை தொடர்ந்தேன்.
எனக்கு பயிற்சியாளர், நண்பர்கள் உற்சாகம் அளித்தனர். இதனால் இந்த சாதனையை என்னால் செய்ய முடிந்தது என கூறினார்.
இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை தொடர்ந்து கிளிக்மாஞ்சாரோ சிகரத்தை தொட்டு சாதனை படைத்த இந்திய மாணவி சிவாங்கி பதக்கிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவாங்கியின் முயற்சி உலக சாதனை பட்டியலில் விரைவில் இடம் பெறவுள்ளது.
Related Tags :
Next Story






