உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 29 July 2018 4:00 AM IST (Updated: 28 July 2018 10:17 PM IST)
t-max-icont-min-icon

* பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலையில் நடந்த தேர்தலில் வாக்காளர்கள் குறிப்பாக பெண் வாக்காளர்கள் திரண்டு வந்து ஓட்டு போட்டதை அமெரிக்கா வெகுவாக பாராட்டி உள்ளது.

*    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எனது விருந்தினராக மாஸ்கோ வர வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்து உள்ளார். இதை அமெரிக்க ஜனாதிபதி மாளிகை வரவேற்று உள்ளது.

*    நேபாளத்தில் பிரித்வி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

*    மெக்சிகோவில் கான்கன் கடற்கரை உல்லாச விடுதியில் தாதாக்களுக்கும், போலீஸ் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 5 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

*    ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் உள்ள பெண் சுகாதார பணியாளர் பயிற்சி மையத்தில் பயங்கரவாதிகள் நேற்று புகுந்து தாக்குதல் நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. சேத விவரம் உடனடியாக தெரிய வரவில்லை.

1 More update

Next Story