உலகைச் சுற்றி....

*இஸ்ரேல் நாட்டை யூத நாடு என பிரகடனம் செய்து மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுகீர் பாலூல் என்ற அரபு எம்.பி. பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
* பாகிஸ்தானில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிக்கப்பட்டதாக அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் கூறுகிறது. ஆனால் அங்கு கராச்சி நகரிலும், சியால்கோட் நகரிலும் காலி ஓட்டு பெட்டிகளும், ஓட்டுச்சீட்டுகளும் கண்டெடுக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
*அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பரவி வருகிற காட்டுத்தீயில் 2 பேர் பலியானதாகவும், வயதான ஒரு பெண்ணும், அவரது 2 பேரக்குழந்தைகளும் காணாமல் போய் விட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளிவந்தன. இப்போது அந்த பெண்ணும், அவரது பேரக்குழந்தைகளும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காட்டுத்தீயால் ஏற்பட்டு உள்ள உயிர்ப்பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.

Related Tags :
Next Story