

பெஷாவர்,
வடமேற்கு பாகிஸ்தானில் புனெர் நகரில் இருந்து கராச்சி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அது கைபர் பக்துன்குவாவில் கோஹத் மாவட்டத்தில் சமரி பகுதி அருகே வந்தபொழுது, லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதனை அடுத்து மீட்பு பணியாளர்கள் உடனடியாக அங்கு சென்று உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 20 பேர் பலியாகினர். அவர்களில் 2 பேர் பெண்கள். 2 பேர் சிறுவர்கள். 35 பயணிகள் காயமடைந்து உள்ளனர்.