உலக செய்திகள்

சிரியாவில் பயங்கரம் பிணைக்கைதி சுட்டுக்கொலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறிச்செயல் + "||" + IS Executes Hostage From Syria’s Sweida

சிரியாவில் பயங்கரம் பிணைக்கைதி சுட்டுக்கொலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறிச்செயல்

சிரியாவில் பயங்கரம் பிணைக்கைதி சுட்டுக்கொலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறிச்செயல்
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியா நாட்டில் ஸ்வேய்டா மாகாணத்தின் பெரும்பகுதி அதிபர் பஷார் அல் ஆசாத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியா நாட்டில் ஸ்வேய்டா மாகாணத்தின் பெரும்பகுதி அதிபர் பஷார் அல் ஆசாத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் அந்த மாகாணத்தின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் அமைந்து உள்ள பாலைவன பகுதிகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அங்கு சமீபத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தினர். அவற்றில் சுமார் 200–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். அவற்றில் பெரும்பாலோர் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.

மேலும், 30–க்கும் மேற்பட்டவர்களை பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்றனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிணைக்கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டவர்களில் டவுகன் அபு அமர் (வயது 19) என்ற வாலிபரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்று விட்டனர்.

இந்த தகவலை அந்த நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகமும், டவுகன் அபு அமர் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதை உறுதி செய்தது.