உலக செய்திகள்

கலிபோர்னியாவில் ஷாப்பிங் சென்டர் அருகே விமானம் மோதி விபத்து; 5 பேர் பலி + "||" + Plane Goes Down At Parking Lot Outside California Mall, 5 Dead

கலிபோர்னியாவில் ஷாப்பிங் சென்டர் அருகே விமானம் மோதி விபத்து; 5 பேர் பலி

கலிபோர்னியாவில் ஷாப்பிங் சென்டர் அருகே விமானம் மோதி விபத்து; 5 பேர் பலி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஷாப்பிங் சென்டர் அருகே சிறிய ரக விமானம் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்டா அன்னா நகரில் ஷாப்பிங் சென்டர் ஒன்று உள்ளது.  இந்த நிலையில் கன்கார்டுக்கு உட்பட்ட ஈஸ்ட் பே புறநகர் பகுதியில் இருந்து 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

அது திடீரென அவசரமுடன் தரையிறங்க முற்பட்டு உள்ளது.  இதில் ஷாப்பிங் சென்டர் அருகே இருந்த வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த விபத்தில் தரை பகுதியில் இருந்தவர்கள் யாரும் காயமடைந்து உள்ளனரா? என்பது பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை.

இதனை அடுத்து உடனடியாக அங்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டது.  இந்த விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையை தொடங்கி உள்ளது.  விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு முடிவு செய்யும்.


தொடர்புடைய செய்திகள்

1. அதிக மது கேட்டு விமானத்தில் ரகளை செய்த பெண் கைது
மும்பையில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் அதிக மது கேட்டு ரகளை செய்த வெளிநாட்டு பெண் பயணி கைது செய்யப்பட்டார்.
2. விமானம் மீது டிரக் மோதியதால் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு
கத்தார் ஏர்வேஸ் விமானம் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதால் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3. மும்பை விமானத்தில் பறவை மோதி விபத்து
மும்பையில் இருந்து நேற்று காலை அவுரங்காபாத் நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
4. மலேசியா விமானம் திடீர் ரத்து பயணிகள் கடும் அவதி
மலேசியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.