உலக செய்திகள்

காசா முனையில் இஸ்ரேல் குண்டு வீச்சு: ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலி + "||" + At the edge of Gaza Israel bombing Hamas operators killed 2

காசா முனையில் இஸ்ரேல் குண்டு வீச்சு: ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலி

காசா முனையில் இஸ்ரேல் குண்டு வீச்சு: ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
காசா,

பாலஸ்தீனைப் பொறுத்தவ ரயில், அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன மக்களிடையே செல்வாக்கு பெற்று உள்ளது.

பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலை மீட்டுக்கொடுத்து, மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதே ஹமாஸ் இயக்கத்தினர் நோக்கம் ஆகும்.ஹமாஸ் இயக்கத்தினரை இஸ்ரேல் பயங்கரவாதிகள் என கூறுகிறது.

இந்த நிலையில், காசாமுனையில் ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து நேற்று இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இதில் ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலியாகினர். இஸ்ரேல் ராணுவத்தினரை குறிவைத்து ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடுக்கு பழிவாங்கும் விதமாக இந்த குண்டுவீச்சை நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.