உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட தனி நாடாக கொலம்பியா அங்கீகரித்து உள்ளது.
* ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஒரு பஸ் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில குழந்தைகள் பலியாகி உள்ளனர். பல குழந்தைகள் படுகாயம் அடைந்து உள்ளனர். இதை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்து உள்ளது.


* தெற்கு சூடானில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களின் தலைவர் ரியெக் மச்சார் உள்ளிட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அதிபர் சல்வா கீர் உத்தரவிட்டு உள்ளார்.

* அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமையன்று 71 வயதான சீக்கியர் ஒருவர் 2 பேரால் இரும்பு கம்பி கொண்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இது வழிப்பறி கொள்ளை முயற்சியில் நடந்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கலிபோர்னியா மாகாண போலீஸ் அதிகாரி டேரில் மெக் அலிஸ்டர் மகன் டைரோன் மெக் அலிஸ்டர் (18) மற்றும் 16 வயது சிறுவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

* இங்கிலாந்து நாட்டில் முன்னாள் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் சில மாதங்களுக்கு முன்னர் நச்சு தாக்குதலுக்கு ஆளாகி இப்போது மீண்டு உள்ளனர். அவர்கள் தாக்கப்பட்டதற்கு ரஷியா தான் காரணம் என புகார் எழுந்து உள்ளது. அவர்கள் நரம்பு மண்டலத்தை முடக்கி விடுகிற ‘நோவிசோக்’ என்ற நச்சுப்பொருளால்தான் தாக்கப்பட்டனர் என்பது உறுதிபடுத்தப்பட்டால் ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

* சிலி நாட்டில் 2 முறை அதிபர் பதவி வகித்த மிச்செல்லி என்ற பெண் தலைவரை ஐ.நா. மகளிர் உரிமை அமைப்பின் அடுத்த தலைவராக நியமித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிவித்து இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
* அகதிகள் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடன் நட்பு ரீதியான ஆலோசனை நடத்தியதாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ராடர் தெரிவித்தார்.
2. உலகைச் சுற்றி...
* சீனாவின் சட்ட விதிகளை மீறி செயல்பட்டதற்காக கனடாவின் முன்னாள் தூதர் ஒருவரை தாங்கள் கைது செய்து இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
3. உலகைச் சுற்றி...
* மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது, ‘1 எம்.டி.பி.’ என்னும் மலேசிய வளர்ச்சி நிதி தணிக்கை அறிக்கையை திருத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
4. உலகைச் சுற்றி...
* உள்நாட்டுப் போர் நடந்து வருகிற லிபியாவில் பாதுகாப்பு நிலைமை மேம்பாட்டால் தங்கள் தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
5. உலகைச் சுற்றி...
* சீனாவில் லெஷான் நகரில், வேகமாக வந்த கார் ஒன்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தின் மீது மோதியது. இதில், 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.