கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு


கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 2:52 PM GMT (Updated: 10 Aug 2018 2:52 PM GMT)

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.



மாண்ட்ரீல், 


கனடாவின் நியூ பர்ன்ஸ்விக் மாகாண தலைநகரான பிரடெரிக்டன் நகரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் குடியிருப்புவாசிகளுக்கு பாதுகாப்புக்கான அறிவுரைகளை வழங்கினர். யாரையும் வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்த அவர்கள், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்கும் பணியிலும் இறங்கினர். இதன் பயனாக அந்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.

 அவரிடம் விசாரணையை தொடங்கி உள்ள அதிகாரிகள், துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கனடாவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவை காட்டிலும் கனடாவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டம் கடுமையாக உள்ளது, இருப்பினும் அங்கு சமீப காலமாக துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story