உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் கஜினி நகரத்தில் தலீபான்கள் நடத்திவரும் தாக்குதலுக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு + "||" + Afghanistan: Over 100 dead in Taliban attacks in Ghazni

ஆப்கானிஸ்தானின் கஜினி நகரத்தில் தலீபான்கள் நடத்திவரும் தாக்குதலுக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கஜினி நகரத்தில் தலீபான்கள் நடத்திவரும் தாக்குதலுக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி நகரத்தில் தலீபான்கள் நடத்திவரும் தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். #Ghazni #Taliban
காபூல், 

ஆப்கானிஸ்தான் நாட்டில்  கஜினி மாகாணத்தின் தலைநகரமான கஜினி நகரத்தை பிடிப்பதற்கு கடந்த 9–ந் தேதி இரவில் தலீபான்கள் களத்தில் இறங்கினர். அவர்களை எதிர்த்து ஆப்கானிஸ்தான் படையினரும் மோதினர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. தலீபான்களை குறிவைத்து வான் தாக்குதலும் நடத்தப்பட்டது. 

இப்போது கஜினி நகரத்துக்கு தலீபான்கள், ஆப்கானிஸ்தான் அரசு என இரு தரப்பினரும் உரிமை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் கஜினி நகரத்தில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 133 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 90 பேர் ராணுவ வீரர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் இறந்தவர்களில் 13 பேர் பொதுமக்கள் ஆவார். இதனிடையே தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு தீ வைத்த தலீபான்கள், காபூல்-கந்தகார் சாலையை தகர்த்தனர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே சண்டை நீடிப்பதால் கஜினி நகரத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.