ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 48 மாணவர்கள் பலி


ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 48 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 15 Aug 2018 11:39 PM IST (Updated: 15 Aug 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாயினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்திற்குள் நேற்று புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்த அனைவரும் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் ஆவர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

1 More update

Next Story