உலகைச்சுற்றி....


உலகைச்சுற்றி....
x
தினத்தந்தி 17 Aug 2018 4:30 AM IST (Updated: 17 Aug 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கொல்ல நடந்த முயற்சியில் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


* வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் கைதான இந்தோனேசிய பெண் சிடி ஆயிஷா, வியட்நாம் பெண் டோன் தி ஹூவாங் ஆகியோருக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் உள்ளதால், செசன்ஸ் கோர்ட்டு முறைப்படி விசாரணை நடத்த ஷா அலாம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

*அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சில ஊடக நிறுவனங்கள் பொய் செய்தி வெளியிடுவதாக கூறி, அவற்றை அமெரிக்க மக்களின் எதிரிகள் என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு எதிராக அமெரிக்க ஊடகங்கள் வரிந்து கட்டுகின்றன. இதற்கான அழைப்பை ‘தி பாஸ்டன் குளோப்’ விடுத்தது. இதையடுத்து 350-க்கும் மேற்பட்ட அமெரிக்க நாளிதழ்கள் டிரம்புக்கு எதிராக தலையங்க கட்டுரைகள் வெளியிடுகின்றன.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உளவுத்துறை பயிற்சி மையத்தின் மீது துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நேற்று காலை தாக்குதல் நடத்தினர். அதன் சேத விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.

* வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தி கொல்ல நடந்த முயற்சியில் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் தொடர்பு உடைய மேலும் 2 வெனிசூலா நாட்டினரை கண்டுபிடிக்க உதவுமாறு பெரு நாட்டின் போலீஸ் உதவியை வெனிசூலா நாடி உள்ளது.
1 More update

Next Story