தவறுதலாக நடந்த ஏவுகணைத் தாக்குதல்!

எஸ்தோனியா நாட்டில் போர் ஒத்திகையின்போது ஸ்பெயின் போர் விமானம் ஒன்று தவறுதலாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெற்கு எஸ்தோனியாவில் ஒத்திகை இடம்பெறும் பகுதியில், வானில் இருந்து வானில் தாக்கும் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டுள்ளது.
10 கிலோகிராம் வெடிபொருளைச் சுமந்த அந்த ஏவுகணையால் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த ஏவுகணை எந்த விமானத்தையும் தாக்காமல் தரையில் விழுந்துள்ளது.
‘உயிராபத்து ஏற்படாததற்கு இறைவனுக்கு நன்றி’ என்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் எஸ்தோனிய பிரதமர் ஜூரி ரடாஸ், ‘இந்தச் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது’ என்றும் கூறியுள்ளார்.
ஏவுகணையை ஏவும்போது கவனமாக இருக்க வேண்டாமா?
Related Tags :
Next Story






