உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 18 Aug 2018 10:45 PM GMT (Updated: 18 Aug 2018 7:13 PM GMT)

ஜெர்மனிக்கும், கிரீஸ் நாட்டுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

* பாகிஸ்தானில் 111 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ஆகிறார்.

* கோஸ்டாரிக்கா நாட்டில், பனாமா எல்லையில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

* ஜெர்மனிக்கும், கிரீஸ் நாட்டுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி ஜெர்மனியில் உள்ள அகதிகள், கிரீஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்து இருந்தால் அவர்களை, அந்த நாடு ஏற்றுக்கொள்ளும்.

* மாலி நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய சவுமய்லா சிஸ்சே, அதிபர் இப்ராகிம் பவுபக்கர் வெற்றியை எதிர்த்து அங்கு உள்ள அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார்.

* ஏமன் நாட்டில் சில தினங்களுக்கு முன்பாக குழந்தைகள் பயணம் செய்த பஸ் மீது சவுதி கூட்டுப்படையினர் குண்டு போட்டனர். இதில் 40 குழந்தைகள் பலியாகினர். இந்த குண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என இப்போது தெரியவந்து உள்ளது.


Next Story