பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.2 ஆக பதிவு


பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 19 Aug 2018 6:58 AM IST (Updated: 19 Aug 2018 6:58 AM IST)
t-max-icont-min-icon

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 8.2 ஆக பதிவாகி உள்ளது.

பசிபிக் கடற்பகுதியில் அமைந்த பிஜி தீவு கூட்டங்களில் ஒன்றான எண்டோய் தீவின் வடகிழக்கே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 8.2 ஆக பதிவாகி உள்ளது.  ஆனால் கடலுக்கு அடியில் 560 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தினால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.  அதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

கடந்த சில மாதங்களாக பிஜி தீவு பகுதிகளில் ரிக்டர் மதிப்பில் 4க்கு மேற்பட்ட அளவிலான அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story