தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி லண்டனில் கைது

மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளியான ஜபீர் சித்திக் (வயது 51), லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் கைது செய்யப்பட்டார்.
லண்டன்,
மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளியான ஜபீர் சித்திக் (வயது 51), லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்தியா–இங்கிலாந்து இடையே உளவு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அவர் பிடிபட்டார்.
ஜபீர் சித்திக், 10 ஆண்டு கால விசாவில் இங்கிலாந்தில் வசித்து வந்தார். இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட உலகம் முழுவதும் தாவூத் இப்ராகிமின் முதலீடுகளை அவர் நிர்வகித்து வந்தார். தாவூத் இப்ராகிமின் வலது கரமாகவும், நிதி மேலாளராகவும் திகழ்ந்து வந்தார்.
Related Tags :
Next Story






