பாகிஸ்தான் ராணுவத்தை நவீனபடுத்தும் சீனா; ராஜஸ்தான் எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான்

ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ஆயுதங்களை குவித்து வருகிறது. சீனாவிடம் இருந்து வாங்கிய நவீன ஜாக்கெட் அணிந்து எல்லை படையினரை பாகிஸ்தான் வீரர்கள் தாக்குகின்றனர்.
புதுடெல்லி
எல்லை பாதுகாப்பு படையினர் உள்துறை அமைச்சகத்துக்கு அளித்துள்ள அறிக்கையில் இந்தியாவின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து வருகிறது என கூறபட்டு உள்ளது.
அந்த அறிக்கையின் படி பாகிஸ்தான், ராஜஸ்தான் ரமிம் யார் கான் மாவட்டம் பஹாவல்நகர் மற்றும் ஜெய்சல்மேர் ஆகிய இடங்களில் இரண்டு புதிய ஆயுதங்களை வைத்துள்ளது. எந்தவொரு விதத்திலும் ராணுவ வீரர்களை காப்பாற்றுவதற்கு அந்த முகாமில் பாகிஸ்தான் ஒரு ஹெலிபேடு ஒன்றை அமைக்க உள்ளது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து 37 கிலோ மீட்டர் தூரத்தில் ஆயுதங்கள் உள்ளன, மேலும் பாகிஸ்தானும் அங்கு பல பதுங்கு குழிகளை கட்டியுள்ளன, அங்கு அவர்கள் விரைவில் ஆயுதங்களை கொண்டுவர முடியும். சீனா கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் இராணுவத்தை நவீனபடுத்துவதில் ஈடுபட்டிருக்கிறது.
சீனாவின் 800 கிமீ ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டத்தின் மூலம்,பாகிஸ்தான் ராணூவத்திற்கு சீனா ஏவுகணைகள் மற்றும் போர்க் கப்பல்கள் வழங்கியுள்ளது. மற்றொரு அறிக்கையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான் ஐஎஸ்ஐ இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் வெப்ப இமேஜிங்கை உருவாக்கி உள்ளது. இந்த சாதனத்தை தடுக்க, ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளுக்கு வெப்ப ஜாக்கெட்டுகளை கொடுத்துள்ளது. இந்த ஜாக்கெட்டுகள் அணிந்து கொண்டு பயங்கரவாதிகள் எல்லையை கடந்து செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. புலனாய்வு அமைப்புக்களின் இந்த அறிக்கையில் இருந்து பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையாகி உள்ளன.
உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட இரண்டாவது அறிக்கையில் எல்லைப் பகுதியிலுள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவுகளுக்கு ஐ.எஸ்.ஐ. எதிர்ப்பு வெப்ப ஜாக்கெட்டுகள் வழங்கியதாக கூறப்பட்டது. இந்த ஜாக்கெட்டுகளை இரவு பார்வை கண்ணாடிகள் பயன்படுத்தி காண்பது கடினம்.
சில மாதங்களுக்கு முன் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அவர்கள் எல்லைபாதுகாப்பு படையினர் அருகில் இருந்து சுட்டனர். ஆனால் இந்த நடவடிக்கையை எல்லை பாதுகாப்பு படையினரால் இரவு காணும் சாதனத்தை கொண்டு கண்டறிய முடியவில்லை. பின்னர் அந்த வீடியோவை ஆய்வு செய்ததில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை பாகிஸ்தான் வீரர்கள் அருகில் இருந்து சுடும் போது அந்த ஜாக்கெட் அவர்களை காப்பாற்றி உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கபட்டு உள்ளது.
Related Tags :
Next Story






