ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுக்கபட்டது சட்டபூர்வமானதாகும்- டொனால்டு டிரம்ப்


ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுக்கபட்டது  சட்டபூர்வமானதாகும்- டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 23 Aug 2018 2:02 PM IST (Updated: 23 Aug 2018 2:02 PM IST)
t-max-icont-min-icon

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுக்கபட்டது சட்டபூர்வமானதாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். #DonaldTrump

வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்ட மைக்கேல் டீ கோகன் , கடந்த 2016 இல் ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக அமெரிக்க ஊடகங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

டிரம்ப்புடனான உறவு குறித்து பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க ஸ்ட்ரோமி டேனியல்ஸ் எனும் அந்த நடிகைக்கு பணம் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. 

முன்னதாக, அதிபர் தேர்தல் நடந்த 2016 இல் டிரம்ப் உடனான உறவு குறித்து பேச டேனியல்ஸ் சில தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டதால் அவருக்கு பணம் வழங்கப்பட்டது என்ற செய்தி கடந்த ஜனவரி மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் உடன் டேனியல்ஸ்க்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று அந்த நடிகையின் செய்தித்தொடர்பாளர் ஜனவரி 30 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனால்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோகன் தெரிவித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறி டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்ததாக நீதிமன்றத்தில் கோகன்  ஒப்புக்கொண்டார்.

வேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையில், 51 வயதான கோகன் வரி மற்றும் வங்கி பண மோசடி உள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் குறித்து தனக்கு தெரிந்த அனைத்தையும் கூற' கோவன் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் லன்னி டேவிஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், ஆதாயம் பெறுவதற்காக கோவன் கட்டுக்கதைகளை உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கபடுவதற்காக தான் ரஷ்யாவுடன் எந்த கூட்டுச்சதியும் செய்யவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

ஃபாக்ஸ் அண்ட் பிரண்ட்ஸ்  தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அளித்த பேட்டியில், தன் பெயரில் பணம் செலுத்தப்பட்டதை பின்னர் அறிந்து கொண்டதாகவும், அதற்கும் தேர்தல் பிரசாரத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

கோவன் மூலம் பணம் கொடுக்கபட்டது  சட்டபூர்வமானதாகும். இரண்டு பெண்களுக்கு பணம் செலுத்துவது தேர்தல் பிரச்சார விதிகள் மீறவில்லை.  பிரச்சார பணத்திலிருந்து கொடுக்கபட்டது அல்ல, எனது தனிப்பட்ட முறையில் கொடுக்கபட்டது என கூறி உள்ளார்.
1 More update

Next Story