இறந்து போனவரை சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட பெண்


இறந்து போனவரை சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட பெண்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:13 PM IST (Updated: 23 Aug 2018 4:13 PM IST)
t-max-icont-min-icon

50 ஆண்டுகள் உயிருக்கு உயிராக நேசித்த தோழி இறந்த நிலையில் அவரை பெண்ணொருவர் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்


அமெரிக்கா  உட்டா  மாகாணத்தின் சால்ட் லேக்  நகரை சேர்ந்தவர் போனி போரிஸ்டர் (74). இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை பிரிந்த நிலையில் பிவர்லி கிரோசைண்ட் என்ற பெண் போனிக்கு தோழியாகியுள்ளார். இதையடுத்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்து கொண்டு அன்பாக இணைந்து வாழ்ந்தார்கள்.இந்நிலையில் கடந்த மே மாதம் பிவர்லி உயிரிழந்துள்ளார்.

இதன்பின்னர் போனி நெகிழ்ச்சியான முடிவை எடுத்தார். அதாவது உலகுக்கு பிவர்லியை தான் திருமணம் செய்து கொண்டேன் என நிரூபிக்க விரும்பி இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விசித்திரமான வழக்கை விசாரித்த நீதிபதி, போனியின் கோரிக்கையை ஏற்று உயிரிழந்த பிவர்லிக்கும், போனிக்கும் திருமணம் நடந்ததற்கான சான்றிதழை வழங்கினார். இதையடுத்து போனி ஆனந்த கண்ணீர் வடித்தார்.இந்த  மாகாணத்தில் இறந்தவர்களை சட்டபூர்வமாக ஓரின திருமணம் செய்து கொள்ளும் இரண்டாவது நிகழ்வு இதுவாகும் என நீதிபதி கூறியுள்ளார்.
1 More update

Next Story