உலகைச் சுற்றி..


உலகைச் சுற்றி..
x
தினத்தந்தி 24 Aug 2018 4:30 AM IST (Updated: 23 Aug 2018 10:17 PM IST)
t-max-icont-min-icon

* அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்த 5 சீக்கியர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு ஓரிகான் மாகாண சிறையில் 3 மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்தனர். இப்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், டிரம்ப் தங்களோடு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்பதை வெளியே சொல்லாமல் இருக்க 2 பெண்களுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.1 கோடியே 96 லட்சம்) கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை டிரம்பின் முன்னாள் வக்கீல் மைக்கேல் கோஹன் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். டிரம்ப் உத்தரவின்பேரில் தேர்தல் சட்டத்தை மீறி, இதை செய்ததாக அவர் கூறினார். ஆனால் இது சட்டத்துக்கு உட்பட்டதுதான், தேர்தல் சட்டத்தை மீறியது ஆகாது என டிரம்ப் கூறி உள்ளார்.

* ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்தபோதும், இப்போது மூத்த மந்திரிகள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி பதவி விலகி உள்ளனர். இதனால் அவர் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. ஓட்டெடுப்பு நடத்தினால், மால்கம் டர்ன்புல் பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

* வட கொரியாவில் சோகே ஏவுகணை தளத்தை அழிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வட கொரியாவினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறிய செயல் என பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story