அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது - அமெரிக்க அட்டர்னி ஜெனரல்

அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜெப் செஷன்ஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்
அமெரிக்க நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனங்கள் செய்து வருகிறார்
குறிப்பாக 2016-ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை நீதித்துறை கையாளும் விதம் குறித்து அவர் விமர்சன கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அதிபர் டிரம்பின் ஆதரவாளராக இருந்துவந்த செஷன்ஸ், பாரபட்சமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கும் பொருட்டு விசாரணையில் இருந்து விலகி, ராட் ரான்ஸ்டெனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்.
ஜெப் செஷன்ஸின் கட்டுப்பாட்டில் அவரது துறை இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார். இதை தொடர்ந்து அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று வெளிப்படையான பதிலடியை செஷன்ஸ் கொடுத்து உள்ளார்.
நான் பதவி ஏற்ற நாளில் நீதித்துறை கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டேன், நான் அட்டர்னி ஜெனரல் இருக்கும்வரை, அரசியல் நடவடிக்கைகள் மூலம் நீதித்துறை செயல்திறன் பாதிக்காது. அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது .நான் உயர்ந்த தரங்களைக் கோருகிறேன், இதனை அவர்கள் சந்தித்தது இல்லை.
அமெரிக்காவை விட அதிகமான திறமையான, அதிக ஈடுபாடு கொண்ட சட்ட வல்லுநர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு எந்த ஒரு நாடும் இல்லை. அவர்களோடு சேர்ந்து சேவை செய்வதில் பெருமை கொள்கிறேன், சட்டத்தின் ஆட்சியை வெற்றிகரமாக முன்னேற்றுவதில் நாம் செய்த வேலை குறித்து பெருமிதம் கொள்கிறேன். "இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story






